"மின்னுவதெல்லாம்"... புதுமைப்பெண் (1959) இசை : டி ஜி லிங்கப்பா பாடல் ஏ மருதகாசி பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் கவிஞர் அ. மருதகாசி *************************** கவிஞர் திரு அ. மருதகாசி அவர்கள் கும்பகோணம் கொள்ளிடக்கரையிலுள்ள மேலகுடிக்காடு கிராமத்தில் 13-2-1920-இல் பிறந்தார்... தந்தை அய்யம்பெருமாள் உடையார்-- தாயார் மிளகாயி அம்மாள்... 1940-இல் திருமணம் புரிந்த அவரின் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள்... . தமிழ்மேலும் கலை மேலும் பெரும் விருப்பம் கொண்ட கவிஞர் மருதகாசி அவர்கள் முதன்முதலாக நாடகங்களுக்கு பாடல் எழுதலானார்... திருச்சி லோகநாதன் அவர்கள் இசைஅமைத்த "வானவில்" நாடகத்திற்கு கவிஞர் மருதகாசி அவர்கள் எழுதிய பாடல்களைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்கள் 1949-இல் தயாரித்த "மாயாவதி" படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பை தந்தார்... "பெண்ணெனும் மாயப் பேயாம்" என்கிற தத்துவப் பாடலே கவிஞர் மருதகாசி அவர்கள் எழுதிய முதல் பாடல்... இசை ஜி ராமநாதன்... தொடர்ந்து பல படங்கள்... பல இசை அமைப்பாளர்கள் ... சுமார் 250 படங்களில் 4000 பாடல்களை எழுதி உள்ளார் கவிஞர் மருதகாசி அவர்கள்... "பாடல் எழுதும் வாய்ப்பு தானாக வரவேண்டும்... அதற்காக அலையக் கூடாது... நான் கவிஞனே தவிர வியாபாரி அல்ல... என் பாடல்கள் விலை மதிப்பற்றவை-- ஆதலால் என் பாடல்களை விலை பேசக் கூடாது"... என தன்மானத்துடனும் தன்னம்பிக்கையுடனும் முழங்கிய கவிஞர் மருதகாசி அவர்கள் 29-11-1989-ல் தமிழர் வாழும் இடமெல்லாம் தன்னை நிலைநிறுத்திவிட்டு விண்ணுலகை அடைந்தார்... கவிஞர் மருதகாசி அவர்களின் அனைத்துப் படைப்புகளும் 2007--ம் வருடம் மே மாதம் தமிழக அரசால் அரசுடமை ஆக்கப் பட்டது... vembarmanivannan37@gmail.com